உலகம்

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் புதிய வீடியோ வெளியீடு

webteam

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவிய நிலையில் , கொரோனா வைரஸ் குறித்த ஆய்வு கூட்டத்தில் அவர் பங்கேற்ற வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச செய்திகளில் நீண்ட நாட்களாக விடை தெரியாத புதிராக சென்றுகொண்டிருக்கும் செய்தி வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்த தகவல்கள். இவர் இறந்துவிட்டதாக அமெரிக்க தரப்பிலிருந்து செய்திகள் கசியத் தொடங்கியது முதலே சர்வதேச அரங்கில் சர்ச்சை பற்றிக்கொண்டது. சர்ச்சை அதிகரிக்க தனது நாட்டில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார் கிம் ஜாங் உன்.

இந்நிலையில் மீண்டும் கிம் ஜாங் உன் உடல்நிலை தொடர்பாக சர்ச்சைகள் பரவின. அவரது தங்கைக்கு முக்கிய பொறுப்புகள் சில வழங்கப்பட்டதும் சர்ச்சைகள் அதிகரித்தன். குறிப்பாக கிம் ஜாங் உன் கோமாவுக்கு சென்றுவிட்டதாகவும் அவரது அதிகாரங்கள் சகோதரியிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் , கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் குறித்தும் இவ்வார இறுதியில் வடகொரியாவை தாக்க இருக்கும் புயல் குறித்தும் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கிம் ஜாங் உன் பங்கேற்ற வீடியோ வெளியாகியுள்ளது.