வடகொரியா நாளை மீண்டும் ஏவுகணை சோதனை நடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஜூலை 27ம் தேதி கொரிய போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 64வது தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை வெற்றி தினமாக வடகொரியா கொண்டாடி வருகிறது. ஆகையால், நாளைய தினத்தில் ஏவுகணை சோதனை நடத்த வடகொரியா திட்டமிட்டுள்ளதற்கான அறிகுறிகள் தெரிவதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த 4ம் தேதி வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனைக்காக, அமெரிக்காவின் வலியுறுத்தலின் பேரில் அந்நாட்டிற்கு ஐக்கிய நாடுகள் சபை தடைகளை விதித்து. வடகொரியா மீது மேலும் தடைகளை விதிக்க அதன் நெருங்கிய நட்பு நாடான சீனாவிடமும் அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.