உலகம்

மீண்டும் ஏவுகணை சோதனையில் வடகொரியா.. நீடிக்கும் பதற்றம்..!

மீண்டும் ஏவுகணை சோதனையில் வடகொரியா.. நீடிக்கும் பதற்றம்..!

webteam

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளதால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள ஹாம்யோங் மாகாணத்தில் உள்ள சோன்டாக் பகுதியிலிருந்து 3 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக, தென்கொரியா தெரிவித்துள்ளது. கடந்த வாரம் சிறிய தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளை வடகொரியா சோதனை நடத்திய நிலையில், தற்போது மீண்டும் சோதனை நடத்தியுள்ளதாக கூறியுள்ள தென்கொரியா ராணுவம், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அவையின் எச்சரிக்கையையும் மீறி, வடகொரியா அணு ஆயுதங்கள் தயாரித்ததால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதன் மீது பொருளாதார தடைகள் விதித்தன. இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் இருமுறை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

அணு ஆயுத தயாரிப்பை கைவிடுமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை வடகொரியா ஏற்கவில்லை. இதனால், பொருளாதார தடையை விலக்கிக் கொள்ள ட்ரம்ப் மறுத்துவிட்டார். இதையடுத்து வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.