வடகொரியாவை அடாவடி நாடு என ரூபியோ விமர்சித்திருந்த நிலையில், அதற்கு வடகொரியா பதிலடி கொடுத்துள்ளது.
வடகொரியா ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், ரூபியோவின் கருத்துக்கள் அமெரிக்கா மக்களுக்கு உதவாது எனவும், அவரது நடவடிக்கைகள் அமெரிக்கா மக்களின் நலனை பெரிதும்
பாதிக்குமென்றும் வடகொரியா அரசு எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு தக்கபதிலடி கொடுக்கப்படும் எனக் கூறியுள்ள வடகொரியா, அமெரிக்காவின்
வான்பாதுகாப்பு அமைப்பையும் கண்டித்துள்ளது. இது வடகொரியாவில் ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாகவும் வடகொரியா அரசு கூறியுள்ளது. அமெரிக்காவில் ட்ரம்ப் அரசு பதவியேற்றுள்ள நிலையில், அமெரிக்காவிற்கு எதிராக முதல் முறையாக வடகொரியா விமர்சித்துள்ளது.