தென்கொரியாவின் அரசு நிலையிலான நேரடித் தொலைபேசி இணைப்பைத் மீண்டும் தொடங்குவதற்கு வடகொரியா உத்தரவிட்டிருக்கிறது.
தென்கொரியாவில் நடக்க இருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரிய அணிகள் பங்கேற்பது குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரியவந்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு வடகொரிய-தென்கொரிய அரசு நிலையிலான நேரடித் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் புத்தாண்டு உரையின்போது தென்கொரியாவுடன் உறவைப் புதுப்பிப்பது குறித்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பேசினார்.
இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் மறுமலர்ச்சி ஏற்படும் என்ற நம்பிக்கை பிறந்தது. அத்துடன் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் அணுசக்தி பிரச்னைக்கு தீர்வு காண இயலும் என தென்கொரிய அதிபர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இரு நாடுகள் இடையே அரசு நிலையிலான நேரடித் தொலைபேசி இணைப்பைத் மீண்டும் தொடங்குவதற்கு வடகொரியா உத்தரவிட்டிருக்கிறது.