உலகம்

மேலும் ஒரு ஏவுகணையை ஏவி சோதனை செய்தது வட கொரியா

Veeramani

வடகொரியா அடையாளம் தெரியாத மேலும் ஒரு ஏவுகணையை ஏவி பரிசோதனை செய்திருப்பதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் வடகொரியா ஏழாவது முறையாக நிகழ்த்தியிருக்கும் ஏவுகணை சோதனை இதுவாகும் என்றும் தென்கொரியா கூறியுள்ளது.இருப்பினும், அது கண்டம்விட்டு கண்டம் பாயக்கூடியதா, எவ்வளவு தூரம் பாய்ந்து சென்றது, எங்கு சென்று விழுந்தது என்பது பற்றிய விவரங்களை தென்கொரியா தெரிவிக்கவில்லை.

வடகொரியா கடந்த 29ஆம் தேதி, 2 குறுகிய தொலைவு ஏவுகணைகளை 5 நிமிட இடைவெளியில் செலுத்தியிருந்தது. தங்கள் நாட்டின் மீதான பொருளாதார தடைகளை விலக்கிக் கொள்ளும்படி வடகொரியா கொடுத்துவரும் அழுத்தத்தை அமெரிக்கா ஏற்காததால் அவ்விரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. இதனால் புத்தாண்டு பிறந்தது முதல் வடகொரியா கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.