உலகம்

இன்று முதல் நோபல் பரிசுகள் அறிவிப்பு

இன்று முதல் நோபல் பரிசுகள் அறிவிப்பு

Rasus

உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றன.

ஆண்டுதோறும் 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2019-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றன. முதல் நாளில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது. நாளை இயற்பியல் துறைக்கும், நாளை மறுதினம் வேதியியல் துறைக்கும் பரிசுகள் அறிவிக்கப்படும்.

வரும் வியாழக்கிழமை இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு இலக்கியத்துக்கான பரிசு அறிவிக்கப்படாததால் இந்த ஆண்டு இரண்டு பரிசுகள் அறிவிக்கப்படுகின்றன.

உலகமே மிகவும் எதிர்பார்க்கும் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்படுகிறது என்பது வரும் 11-ஆம் தேதி தெரிய வரும். 14-ஆம் தேதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. 1901-ஆம் ஆண்டு முதன்முதலில் 5 பிரிவுகளின் கீழ் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து 1969 ஆம் ஆண்டு ரிக்ஸ் வங்கி நன்கொடையாக அளித்த பணத்தைக் கொண்டு நோபல் பட்டியலில் பொருளாதாரத்துக்கான பரிசும் சேர்க்கப்பட்டது.