உலகம்

2017ஆம் மருத்துவ நோபல் பரிசு: 3 அமெரிக்கர்கள் தேர்வு

2017ஆம் மருத்துவ நோபல் பரிசு: 3 அமெரிக்கர்கள் தேர்வு

webteam

2017ஆம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த 3 பேர் தேர்வாகியுள்ளனர்.

நடப்பு ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசுகளை, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசுக் குழுவின் தலைவர் தாமஸ் பெர்ல்மன் அறிவித்தார். இதில் மூலக்கூறு அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகளுக்களில் சிறந்த பங்களித்த ஜெப்ரி ஹால், மிக்கேல் ராஸ்பாஷ், மைக்கேல் யங் ஆகிய மூன்று அமெரிக்கர்கள் தேர்வாகியுள்ளனர்.

இவர்கள் மூன்று பேரும், உடலின் உயிர்க்கடிகாரம் செயல்படும் விதம் குறித்து கண்டறிந்தவர்கள் ஆவர். மூன்று பேர் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதால், சுமார் ரூ.7 கோடி பரிசுத் தொகையானது மூன்று பேருக்கும் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.