உலகம்

கொடுக்க காசு இல்லை! இலங்கைக்கு வந்த எரிவாயுக் கப்பல் நடுக்கடலில் நிற்கும் அவலம்!

ச. முத்துகிருஷ்ணன்

இலங்கைக்கு வந்த எரிவாயுவுக்கான தொகையை அந்நாட்டு அரசு செலுத்தமுடியாததால், எரிவாயுவை சுமந்து வந்த கப்பல் கடலில் நங்கூரமிட்டு காத்திருக்கிறது. கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கையில் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

கடந்த சில நாட்களாகவே சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் எரிவாயுவிற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். கடந்த வியாழனன்று அங்கு 3500 மெட்ரிக் டன் சமையல் எரிவாயுவுடன் சென்று சேர்ந்த கப்பலுக்கு செலுத்தவேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலுத்தப்படாததால் சரக்கு இறக்கப்படாமல் உள்ளது.

இதற்கிடையில் இலங்கையில் எரிவாயு விநியோகம் செய்யும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட விஜித ஹேரத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.