அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் அதிபர் ட்ர்ம்பின் நடவடிக்கைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட்ட ‘ No Kings’ இயக்கத்தின் பேரணியில் ஹாலிவுட் பிரபலங்கள் உள்பட பெருந்திரளான மக்கள் பங்கேற்றனர். சட்டவிரோத குடியேறிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றுதல் உள்ளிட்ட ட்ரம்ப் அரசின் பல நடவடிக்கைகள் அமெரிக்க அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானவை என்று அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது.
இந்த எதிர்ப்பு ‘No Kings’ என்ற இயக்கமாக உருவெடுத்துவருகிறது. கடந்த ஜூன் 14 அன்று அமெரிக்க ராணுவத்தின் 250ஆம் ஆண்டை கொண்டாடும் விதமாக ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. அதே நாளில் ட்ரம்ப் அரசுக்கு எதிரான ‘No Kings’ பேரணிகள் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டன. ட்ரம்ப் தன்னை ஒரு அரசர் போல் கருதிக்கொள்வதாகவும் அமெரிக்க ஜனநாயகமும் அரசமைப்புச் சட்டமும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாகவும் பேரணியில் பங்கேற்ற ஹாலிவுட் நடிகர் மார்க் ரஃபலோ கூறினார்.