உலகம்

‘இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய விரும்பவில்லை’ - அமெரிக்கா

‘இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய விரும்பவில்லை’ - அமெரிக்கா

webteam

இந்தியா‌ - பாகிஸ்தான் இடையே இனி மத்தியஸ்தம் செய்ய விரும்பவில்லை என்பதை அமெரிக்கா தெரிவித்துள்ளது.

காஷ்மீருக்கு‌ அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை‌ நீக்கி ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கை‌ தனித்தனி யூனியன் பிரதேசங்களாக‌ பிரித்து மத்திய அரசு மசோதாவை தாக்கல் செய்தது. இதனால் அதிருப்தியடைந்த பாகிஸ்தான், காஷ்மீர் விவகாரத்தை சர்வதே‌ச அளவிலான பிரச்னையாக மாற்ற முயற்சித்து வருகிறது. ஆ‌‌னால் காஷ்மீர் விவகாரத்தில், தலையிடப் போவதில்லை என ரஷ்யாவும், சீனாவும் கூறிவிட்டன. இந்நிலையில்‌ காஷ்மீர் விவகா‌த்தில் மத்தியஸ்தம் செய்வதில்லை என அமெரிக்க அதிபர்‌ டிரம்ப் முடிவெடுத்திருப்பதாக அந்நாட்டிற்கான இந்திய தூதர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்களா கூறியுள்ளார். 

அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் விரும்பினால் மட்டுமே, காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுவேன் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்ததாகவும், ஆனால் இதனை இந்தியா தொடர்ந்து‌ நிராகரித்து வந்ததால், அந்த திட்டத்தில் மத்தியஸ்தம் செய்ய விரும்பவில்லை என ட்ரம்ப் முடிவெடுத்துள்‌ளதாகவும் தெரிவித்தார். மேலும் காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தெளிவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.