சுவிஸ் வங்கிகளில் செயல்படாத கணக்குகளில் இந்தியர்களுக்குச் சொந்தமான 300 கோடி ரூபாய் கேட்பாரற்றுக் கிடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூன்றாவது ஆண்டாக, செயல்படாத வங்கிக் கணக்குகள் பட்டியலை சுவிஸ் வங்கிகள் வெளியிட்டுள்ளன. கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் விவரங்கள் வெளியிடப்படாத அதில் 300 கோடி ரூபாய் வரை யாரும் உரிமை கோரப்படாத பணம் இருப்பது தெரிய வந்துள்ளது.
2015-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சுவிஸ் வங்கிகள் இந்தப் பட்டியலை வெளியிடுகின்றன. எனினும், இந்தியாவில் சுவிஸ் வங்கிக் கணக்கு குறித்த பரஸ்பரக் குற்றச்சாட்டுகள் தொடரும் நிலையில், யாரும் அந்தப் பணத்துக்கு உரிமை கோராத நிலையே நீடிக்கிறது. சுமார் 40 கணக்குகள், இரண்டு பாதுகாப்பு பெட்டகங்கள் ஆகியவற்றில் இந்தப் பணம் இருப்பதாக சுவிஸ் வங்கிகளின் குறைதீர்ப்பு நடுவர் வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.