உலகம்

நீரவ் மோடியை நாடு கடத்தலாம் : லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு 

Veeramani

14 ஆயிரம் கோடி வங்கிக்கடனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பியோடிய, நீரவ் மோடியை நாடு கடத்தலாம் என்று லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. 

நீரவ் மோடி வழக்கில், சிபிஐ மற்றும் அமலாக்கதுறையின் ஆதாரங்கள் லண்டன் நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டது, அதனடிப்படையில் லண்டன் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதில் நீரவ் மோடி சாட்சிகளை மிரட்டினார் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன என்றும், நீரவ் மோடிக்கு மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது என்கிற வாதம் ஏற்புள்ளதாக இல்லை எனவும் லண்டன் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் இந்திய சிறைகளில் வசதிகள் இல்லை என்கிற நீரவ் மோடியின் வாதமும் நிராகரிக்கப்பட்டது.

வைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமால், இந்தியாவிலிருந்து இங்கிலாந்து 2019இல் தப்பியோடினார். லண்டனின் கைது செய்யப்பட்ட நீரவ்மோடியை இந்தியாவுக்கு கொண்டுவருவதற்காக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை லண்டன் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடந்தன.