உலகம்

மூளை அறுவை சிகிச்சையின்போது பியானோ வாசித்த சிறுமி!

மூளை அறுவை சிகிச்சையின்போது பியானோ வாசித்த சிறுமி!

webteam

மத்தியப்பிரதேச மாநிலத்தில் 9 வயது சிறுமிக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யும்போது அவர் பியோனா வாசித்த வினோத நிகழ்வு நடந்துள்ளது.

குவாலியரை சேர்ந்த சவும்யா என்ற சிறுமிக்கு கடந்த 2 ஆண்டுகளாக அடிக்கடி மயக்கம் வரும் பிரச்னை இருந்தது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளையில் கட்டி இருப்பதை அறிந்து அதை அகற்ற முடிவு செய்தனர். வழக்கமான மூளை அறுவை சிகிச்சைபோல் இல்லாமல் தலையில் சிறிய துளை மட்டும் இட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சையின்போது சிறுமி சவும்யாவின் தலையில் அறுவை சிகிச்சை செய்யும் இடத்தில் மட்டும் மரத்து போகும் ஊசி போடப்பட்டதாக மருத்துவர்கள் கூறினர். ஆனால் சிறுமி சுய நினைவுடன் இருந்ததாகவும் தனக்கு பிடித்த பியானோவை இசைத்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது சிறுமி சவும்யா ஆரோக்கியமாக இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.