உலகத்தில் உச்சத்தைத் தொட்ட கொரோனா தொற்றுப் பரவல் சில நாடுகளில் மெல்ல குறைந்து வருவது நம்பிக்கை அளித்துள்ளது. அமெரிக்காவில் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்களை கொரோனா பாதித்துள்ளது. லத்தின், அமெரிக்க நாடான பிரேசிலில் நாட்டில் ஒரு லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், நியூசிலாந்து நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. கடந்த 100 நாட்களில் அங்கு ஒருவருக்குக்கூட தொற்று கண்டறியப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. மேலும் இரண்டாம் அலை ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதால், மக்கள் கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும் என்றும் அரசு நிர்வாகம் எச்சரித்துள்ளது.
கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் நியூசிலாந்து வென்றுள்ளது. ஆனாலும் மக்கள் பரிசோதனைகளுக்கு மறுப்பதும், அடிப்படை சுகாதார விதிகளைக் கடைப்பிடிக்காமல் இருப்பதும் அரசுக்குக் கவலையளித்துள்ளது.