உலகம்

இன்டர்வியூக்கு வர்றீங்களா? நியூசிலாந்து புது திட்டம்

இன்டர்வியூக்கு வர்றீங்களா? நியூசிலாந்து புது திட்டம்

Rasus

நேர்காணலுக்கு வருபவர்களுக்கு இலவசமாக தங்குமிடம், விமானக் கட்டணம் செலுத்தி திறமையுள்ள என்ஜினீயர்களை தேர்ந்தெடுக்க நியூசிலாந்து திட்டமிட்டுள்ளது.

சிறந்த என்ஜினியர்களை பணிக்கு அமர்த்த நியூசிலாந்து திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு சலுகைகளையும் அறிவித்துள்ளது. வேலைக்காக நேர்காணலுக்கு வரும் 100 பேருக்கு, உலகின் எந்த இடத்திலிருந்து வந்து சென்றாலும் விமானக் கட்டணம், மற்றும் தங்குவதற்கு ஆகும் செலவுகளை இலவசமாகத் தருவதாக அறிவித்துள்ளது. சிறந்த என்ஜினீயரைப் பணிக்கு அமர்த்தும் முயற்சியின் ஒரு பகுதியாக “லுக்சி” என்ற பெயரில் இந்தப் பரப்புரையை தொடங்கியுள்ளது. தங்களுக்கு யாரோ ஒருவர் வேலைக்குத் தேவையில்லை. சிறந்த ஒருவரே தேவை என்றும் வெலிங்டன் மேயர் ஜஸ்டின் லெஸ்டர் தெரிவித்துள்ளார்.

தேர்ந்தெடுக்கப்படும் 100 பேருக்கான நேர்காணல், மே 8-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்க முதலில் சிவி-யை பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர் வீடியோ சாட்டிங் வழியாக நேர்காணல் நடத்தப்படும். இதில் ஒருவேளை நீங்கள் வெற்றி வெறும்பட்சத்தில் வெலிங்கடனுக்குச் சென்று நேர்காணலில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.