பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான 'ஜமாத் உத் தவா' சார்பில் புதிய கட்சி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக இருந்த ஹபீஸ் சையது இந்த அமைப்பை சேர்ந்தவர். மில்லி முஸ்லீம் லீக் என்று அந்த கட்சிக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஹபீஸ் சையதின் நெருங்கிய நண்பரான சாய்ஃபுல்லா ஹாலித் வெளியிட்டார். இக்கட்சியை விரைவில் அதிகாரபூர்வமாக பதிவு செய்ய உள்ளதாகவும், பாகிஸ்தானில் ஒரு உண்மையான இஸ்லாமிய அரசை அமைப்பதே மில்லி முஸ்லீம் லீக் கட்சியின் நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார். அதோடு கடந்த ஜனவரி முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹபீஸ் சையதை விடுவிக்க வேண்டும் எனவும் சாய்ஃபுல்லா ஹாலித் வலியுறுத்தியுள்ளார்.