அமெரிக்கா முகநூல்
உலகம்

அமெரிக்கா|புத்தாண்டு கொண்டாட்டத்தில் கூட்டத்திற்குள் நுழைந்த கார்! 10 பேர் பலி; தீவிரவாத தாக்குதல்?

தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

PT WEB

அமெரிக்காவின் நியூ ஓர்லென்ஸில் கார் ஏற்றியும், துப்பாக்கியால் சுட்டும் நடத்தப்பட்ட தாக்குதலில் தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என FBI தெரிவித்துள்ளது.

இதனால், லூசியானா மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். நியூ ஓர்லென்ஸ் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை நோக்கி வேகமாக வந்த கார், அவர்கள் மீது மோதியது. காரில் இருந்து இறங்கிய நபர் துப்பாக்கியை வைத்து சுட தொடங்கினர். உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களும் பதில் தாக்குதல் நடத்தியதில், அந்த நபர் உயிரிழந்தார்.

இருப்பினும், தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து எஃ.பி.ஐ. விசாரணை தொடங்கியது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் டெக்ஸாஸை சேர்ந்த சாம்சுட் டின் ஜப்பார் என்பது தெரியவந்தது. அவர் பயன்படுத்திய வாகனத்தில் ஐ.எஸ்.ஐ. எஸ். தீவிரவாத அமைப்பின் கொடி இருந்ததால், இதன் பின்னால், தீவிரவாத இயக்கம் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த தாக்குதலில் உயரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் ஜோ பைடன், தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.