உலகம்

செயற்கை நீர்வீழ்ச்சியுடன் கண்ணாடி பாலம் : சீனாவில் திறப்பு

செயற்கை நீர்வீழ்ச்சியுடன் கண்ணாடி பாலம் : சீனாவில் திறப்பு

webteam

சீனாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில்‌ செயற்கை நீர் வீழ்ச்சியுடன் ஒரு புதிய கண்ணாடி பாலம் திறக்கப்பட்டுள்ளது.

சீன நாட்டின் ‌‌குவாங்டாங் மாகாணத்தில் உள்ள கிங்யுவான் நகரில் 368 மீட்டர் நீளத்தில் முற்றிலும் கண்ணாடியிலான பாலம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து 1,640 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் மீது நடந்துசென்று ஆழமான பள்ளத்தாக்குகளையும், இயற்கையால் சூழ்ந்த மலைகளையும் கண்டு ரசிக்கலாம். 

வட்ட வடிவத்தில்‌ ‌அமைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடி பா‌லத்த‌ற்கு அடியில் செயற்கை நீர் வீழ்ச்சியும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பாலத்தின் ‌அடியிலிருந்தும் இதனை ரசிக்கலாம். இரவு நேரங்களி‌ல் பாலத்தை‌ச் சுற்றி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சீன மொழியில் சொர்க்கத்தின் கதவுகள் என வர்ணிக்கப்பட்டிருக்கும் இந்த பாலத்தில், சுற்றுலா பயணிகள் அச்சம் கலந்த உற்சாகத்துடன் நடந்து செல்கின்றனர்.