உலகம்

பெற்றோர்களின் தொடர் புகார்! பப்ஜி விளையாட்டுக்கு தடை விதித்த நேபாளம்!

பெற்றோர்களின் தொடர் புகார்! பப்ஜி விளையாட்டுக்கு தடை விதித்த நேபாளம்!

webteam

இளைஞர்களை அடிமைப்படுத்தும் பப்ஜி விளையாட்டை நேபாள அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது

பெற்றோர்கள் முதல் அரசாங்கம் வரை அனைவருக்கும் பப்ஜி விளையாட்டு பிரச்னையாகவே இருக்கிறது. பள்ளி சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த விளையாட்டுக்கு அடிமையாகி வருவதாக அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விளையாட்டு மூலம் நிறைய குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாகவும், விளையாடுபவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

குஜராத் அரசு இந்த விளையாட்டை ஏற்கெனவே தடை செய்துள்ளது. இன்னும் சில மாநிலங்கள் இந்த விளையாட்டை தடை செய்ய தீவிரமாக யோசித்து வருகின்றன.

இந்நிலையில் பப்ஜி விளையாட்டை நேபாள அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நேபாளின் தொலைதொடர்பு துறையின் துணை இயக்குநர் சந்தீப், சிறுவர்களையும், இளைஞர்களையும் அடிமைப்படுத்தும் பப்ஜி விளையாட்டை தடை செய்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம். 

பப்ஜி தடை நேற்று முதலே அமலுக்குவந்துள்ளது. பெற்றோர்களுக்கு பப்ஜி விளையாட்டு தலைவலியாகவே உள்ளது. தங்களது பிள்ளைகளை அதிக நேரத்தை இந்தவ் விளையாட்டில் செலவழிப்பதாகவும், விளையாட்டுக்கு அடிமையாகவதாகவும் தொடர்ந்து புகார் அளித்தனர். பெற்றோர்களின் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.