உலகம்

அண்டை நாடுகளில் நேபாளத்திற்கே முன்னுரிமை: மோடி

அண்டை நாடுகளில் நேபாளத்திற்கே முன்னுரிமை: மோடி

webteam

நேபாள நாட்டின் ஜனக்பூர் நகர வளர்ச்சிக்காக 100 கோடி ரூபாயை பிரமதர் மோடி அறிவித்துள்ளார். 

நேபாளம் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு ஜனக்பூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்குள்ள ஜானகி கோயிலில் வழிபாடு செய்தார். பின்னர் ராமரின் மனைவி சீதை பிறந்த இடமான ஜனக்பூருக்கும் ராமர் பிறந்த இடமாக கூறப்படும் அயோத்தியாவிற்கும் இடையேயான பேருந்து சேவையை, மோடியும் நேபாள பிரதமர் ஒலி சர்மாயும் தொடங்கி வைத்தனர். அப்போது பேசிய மோடி, இந்தியாவின் அண்டை நாடுகளில் நேபாளத்திற்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறினார்.

 வர்த்தகம், தொழில்நுட்பம், போக்குவரத்து, சுற்றுலா உள்ளிட்டவற்றில் இந்தியாவும், நேபாளமும் இணைந்து செயல்பட்டால் இருநாடுகளுக்கும் நன்மை கிடைக்கும் என்று தெரிவித்தார். சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து உள்ளிட்டவற்றின் மூலம் இந்தியாவையும் நேபாளத்தையும் இணைக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.