உலகம்

நேபாளம் : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 43 பேர் உயிரிழப்பு

நேபாளம் : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 43 பேர் உயிரிழப்பு

rajakannan

நேபாளத்தில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேபாளத்தில் இமயமலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், நாட்டின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வீட்டின் சுவர்கள் பல இடங்களில் இடிந்து வீழ்ந்துள்ளன.

வெள்ளப்பெருக்கும் மற்றும் நிலச்சரிவு காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 பேர் காயம் அடைந்துள்ளனர். சிலர் மாயமாகியுள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேபாளத்தில் பருவமழை வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை இருக்கும். பருவமழையின் தொடக்கத்திலே லட்சக்கணக்கான நேபாள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.