உலகம்

வடகொரியாவுடனான பேச்சுவார்த்தை வீணான செயல்: ட்ரம்ப் பேச்சின் பின்னணி என்ன?

வடகொரியாவுடனான பேச்சுவார்த்தை வீணான செயல்: ட்ரம்ப் பேச்சின் பின்னணி என்ன?

webteam

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது வீணான செயல் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுத திட்டங்களை நிறுத்தாவிட்டால் வடகொரியாவை அழித்துவிடுவோம் என ஐ.நா.வில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியது முதல், இரு நாட்டு தலைவர்களுக்கு இடையே வார்த்தை போர் முற்றத் தொடங்கியது. இந்த சூழலில் பதற்றத்தை தணிக்க அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், வடகொரியா அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்த முயன்று வந்தார். ஆனால் வடகொரியா தரப்பில் அதற்கு எவ்வித ஆர்வமும் காட்டப்படவில்லை.

இதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை முயற்சியை கைவிடும்படி ரெக்ஸ் டில்லர்சனிடம், அதிபர் ட்ரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார். சிறிய ராக்கெட் மனிதருடன் பேச்சுவார்த்தை நடத்த முயல்வது நேரத்தை வீணடிக்கும் செயல் ‌என டில்லர்சனுக்கு அறிவுறுத்தி இருப்பதாக தமது ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.