வோடூ இனத்தவர்கள் கூகுள்
உலகம்

மாந்திரீகம் வைத்திருப்பார்கள் என சந்தேகித்து ஹைட்டியில் 200 பேர் படுகொலை செய்யப்பட்ட கொடுமை!

ஹெய்டிய கும்பலைச் சேர்ந்த தலைவர் ஒருவர் தனது மகனின் இறப்பிற்கு காரணம் வோடூ இனத்தவர்கள் என்று நினைத்து வோடூ பாதிரியார்கள் உட்பட மொத்தம் 200 பேரை படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Jayashree A

கோனேவ் வளைகுடாவில் அமைந்துள்ள ஹைட்டி நகரத்தின் தலைநகர் போர்ட் ஓ பிரின்ஸ். இங்கு வோடூ இனத்தவர்கள் மற்றும் வார்ஃப் ஜெரிமி, ஹெய்டிய இனத்தவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இவர்களில் வோடூ இனத்தவர்கள் ஆப்பிரிக்க மக்கள். மேலும் ஹெய்டிய இனத்தவர்களின் தலைவராக சிட்டே சோலைல் என்பவர் உள்ளார்.

இந்நிலையில் சிட்டே சோலைலின் மகன் சமீபத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்ததாகக் கூறப்படுகிறது. மகனின் நோய்க்கு காரணம் வோடூ இனத்தவர்கள்தான் என்றும், அவர்கள்தான் மாந்த்ரீகம் செய்து மகனுக்கு நோயை ஏற்படுத்தி, அதனால் மகன் இறந்துவிட்டார் என்றும் நினைத்து, வோடூ இனத்தவர்களில் இருந்த வயதான பெரியவர்கள், பாதிரியாளர்கள், பயிற்சியாளர்கள் என்று கிட்டத்தட்ட 200 பேரை ஹெய்டிய கும்பல் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படுகொலையை உறுதிப்படுத்திய ஹைட்டி அரசாங்கம் கடந்த திங்களன்று ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் “இது சொல்ல முடியாத படுகொலை” என்று ஹெய்டிய கும்பல் தலைவனான சிட்டே சோலைல் எதிராக குற்றம் சாட்டியுள்ளது. பில்லி சூனியம் வைத்து தனது மகன் இறந்ததாக நினைத்த சிட்டே சோலைல் தனது கும்பல் மூலம், கடந்த டிசம்பர் 6 - 8 ம் தேதிக்குள் சுமார் 127 ஆண்கள் மற்றும் பெண்கள் என்று குறைந்தது 200 பேரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த படுகொலைக்கு ஐக்கிய நாடுகள் சபையும் கண்டனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஹெய்டிய கும்பலால் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை சிதைத்து தெருவில் எரித்ததாகவும் கூறப்படுகிறது. இதில், வோடூ பாதிரியார்கள் உள்பட நன்கு அறியப்பட்ட சமூக தலைவர்களை, சுற்றி வளைத்து, அவர்களை தனது கோட்டைக்கு அழைத்து வந்து, பிறகு தூக்கிலிட்டதாக சில அறிக்கைகள் கூறுகின்றன.

வகுப்புவாத பிரச்சனைகள் உலகெங்கிலும் இருந்தாலும், தனது மகனின் இறப்பிற்காக ஒரு சமூகத்தினரை குறிவைத்து தாக்கி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.