போலாந்து நாட்டில் மூடப்பட்டிருந்த ரயில்வே கேட்டை உடைத்துக் கொண்டு கடந்து சென்ற கார், அதிவேகமாக வந்த ரயிலில் மோதாமல் நூலிழையில் தப்பித்த காட்சி வெளியிடப்பட்டிருக்கிறது.
காரில் பயணம் செய்த நான்கு பேரும் காயமின்றி உயிர் தப்பினர். ஒருபுறத்தில் இருந்த கேட்டை உடைத்துக் கொண்டு ரயில் பாதையைக் கடந்த கார், மறுபுறம் இருந்த கேட்டுக்கு முன் நின்றுவிட்டது. அப்போது அதிவேகமாக வந்த ரயில் காரின் பின்புறத்தை உரசிச் சென்றது. இதனால் பதறியடித்துக் கொண்டு காரில் இருந்த நான்கு பேரும் வெளியேறினார்கள்.