உலகம்

உறைந்து பனிப்பாறையாக மாறிய நயாகரா நீர்வீழ்ச்சி

உறைந்து பனிப்பாறையாக மாறிய நயாகரா நீர்வீழ்ச்சி

webteam

அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி பனியால் உறைந்து போயிருக்கிறது.

அமெரிக்காவின் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் பனிப்போர்வை போர்த்தியுள்ள நிலையில் சுற்றுலா தலமான நயாகரா நீர்வீழ்ச்சிக்கு வரும் பயணிகள் உறைந்து போன மூடுபனியையும் உறைபனியையும் கண்டு ஏமாற்றம் அடைந்துள்ளனர். நயாகரா நீர்வீழ்ச்சி பனிக்கட்டிகளால் மூடப்பட்டுள்ளதால் அன்டார்டிகா பிரதேசம் போல் காட்சியளிக்கிறது. சொற்ப அளவில் தண்ணீர் வழிவதை பலர் வீடியோ எடுத்துச் செல்கின்றனர்.