பாகிஸ்தானின் ஆளும் கட்சியான, பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கின் தலைவராக நவாஸ் ஷெரீஃப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பனாமா பேப்பர்ஸ் ஊழல் புகார் காரணமாக, பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரீஃப் கடந்த ஜூலை 28ஆம் தேதி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தால் பதவிநீக்கம் செய்யப்பட்டார். பாகிஸ்தான் அரசியல் சட்டப்படி பதவிநீக்கம் செய்யப்பட்டவர் கட்சிப் பதவியையும் இழப்பார் என்றநிலையில், ஷெரீஃபின் கட்சித் தலைவர் பதவியும் பறிபோனது.
இந்நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்டவர் கட்சிப் பதவியை வகிக்க அனுமதிக்கும் வகையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதனால், அடுத்த வாரம் மீண்டும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக நவாஸ் பொறுப்பேற்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.