ஷாங்காய் ஒத்துழைப்பு குழுவின் மாநாட்டுக்காக கஜகஸ்தான் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடம் நலம் விசாரித்துள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு குழுவின் உச்சி மாநாடு கஜகஸ்தான் தலைநகர் அஸ்தனாவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு குழுவில் கஜகஸ்தான், ரஷ்யா, கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பில் பார்வையாளராக இருந்த இந்தியாவும் பாகிஸ்தானும் உறுப்பினராக சேர தீவிர முயற்சி எடுத்து வந்தன. இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளையும் உறுப்பினர்களாக சேர்த்து கொள்ள ஷாங்காய் அமைப்பு முடிவு செய்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் அஸ்தானா நகருக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், இரவு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் நரேந்திர மோடி, நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் பங்கேற்றனர். அப்போது, மோடி, நவாஸ் ஷெரீப் இருவரும் பரஸ்பரம் வரவேற்று நலம் விசாரித்துக் கொண்டனர்.