உலகம்

போரில் 15,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு - நேட்டோ தகவல்

போரில் 15,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு - நேட்டோ தகவல்

JustinDurai

உக்ரைன் உடனான போரில் ரஷ்ய ராணுவ வீரர்கள் 7,000 முதல் 15,000 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளதாக நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 4 வாரங்களைக் கடந்துள்ளது. இந்த சண்டையில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. உக்ரைன் தங்கள் தரப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இந்த போரில், 7 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என நேட்டோ அமைப்பு கணித்துள்ளது.

அந்த அமைப்பில் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். உக்ரைன் அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை கணிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: 'இந்த சமூக வலைதளங்கெல்லாம் ஆபத்து' தடை விதித்தது ரஷ்ய நீதிமன்றம்!