உலகம்

செவ்வாய் கிரகத்தில் பெர்சர்வன்ஸ் ரோவர் பதிவு செய்த ஆடியோவை பகிர்ந்த நாசா!

EllusamyKarthik

அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா செவ்வாய் கிரகத்தில் பெர்சர்வன்ஸ் ரோவர் பதிவு செய்து அனுப்பிய ஆடியோவை பகிர்ந்துள்ளது. கடந்த வாரம் இந்த ரோவர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் தரை இறங்கியதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக செவ்வாய் கிரகத்தை இந்த ரோவரிலிருந்த கேமிரா மூலம் படம்பிடித்து அனுப்பி இருந்தது. 

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்த ரோவரை நாசா அனுப்பி இருந்தது. இந்த சூழலில் தரையிறங்கிய ரோவர் அனுப்பியுள்ள செவ்வாய் கிரகத்தின் ஆடியோ ஒலியையும் நாசா ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. 

மெல்லிய தென்றல் போல அந்த ஒலி இருக்கிறது. சுமார் 18 நொடிகள் இந்த ஆடியோ கிளிப் பிளே ஆகிறது. தொடர்ந்து ரோவர் அங்கு உயிரினங்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்து அது தொடர்பான தகவல்களை அனுப்ப உள்ளது.