அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடைபெற்ற போது விண்ணில் இருந்து எடுக்கப்பட்ட படங்களை, 16 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா வெளியிட்டுள்ளது.
நியூயார்க் நகரில் இருந்த இரட்டை கோபுரம் மீது 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி
அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்கள் மூலம் நடத்திய தாக்குதலில் சுமார் மூன்றாயிரம் பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நிகழ்ந்தபோது வானில் புகை எழுவதை செயற்கைக்கோள் மூலம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்த அமெரிக்க வீரர் FRANK CULBERTSON பார்த்துள்ளார். இதையடுத்து கேமரா மூலம் வானில் இருந்தபடி அவர் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த படங்களை 16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நாசா வெளியிட்டுள்ளது.