உலகம்

ரஷ்யா உதவியின்றி விண்வெளி நிலையத்தை பராமரிக்க முயற்சி

ரஷ்யா உதவியின்றி விண்வெளி நிலையத்தை பராமரிக்க முயற்சி

Sinekadhara

ரஷ்யாவின் உதவியின்றி சர்வதேச விண்வெளி நிலையத்தை விண்வெளி சுற்றுப்பாதையில் தொடரச் செய்வது குறித்த அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா ஆலோசித்து வருகிறது.

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்து வருகின்றன. இதற்கு எதிராக கருத்து தெரிவித்த ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் டிமிட்ரி ரோகோசின், 500 டன் எடை கொண்ட சர்வதேச விண்வெளி நிலையத்தை அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகள் மீது விழச்செய்ய ரஷ்யாவால் முடியும் என்று எச்சரித்திருந்தார். இந்தியா அல்லது சீனா மீதும் அதை விழச் செய்யக்கூடும் என்றும் டிமிட்ரி தெரிவித்திருந்தார். இந்நிலையில், ரஷ்யாவின் உதவியின்றி சர்வதேச விண்வெளி நிலையத்தை விண்வெளியில் பராமரிப்பதற்கான வழிகளை ஆராய்ந்து வருவதாக நாசா தெரிவித்துள்ளது.