உலகம்

புளோரிடா மாகாணத்தை நிலைகுலைய வைத்த 'இயன்' புயல்

webteam

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தை 'இயன்' புயல் தாக்கியது தொடர்பான காட்சிகளை நாசா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது. அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான புயல்களில் ஒன்றாக கருதப்படுகிற 'இயன்' புயல், அந்த நாட்டின் புளோரிடா மாகாணத்தை தாக்கியது. இதனால் அப்பகுதியில் கனமழை கொட்டியது. பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. மணிக்கு 150 மைல் வேகத்தில் சூறாவளி காற்று வீசிய நிலையில், அதன் தாக்கம் தொடர்பான காட்சிகளை நாசா வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க: ’ஒழுங்கான ஆடை அணியுங்கள்’ - சர்ச்சையானதால் அறிவிப்புக்கு பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் வருத்தம்!