உலகம்

தொலைதூர வாயு கோளில் தண்ணீர்: நாசா கண்டுபிடிப்பு

Sinekadhara

பூமியிலிருந்து 1,150 ஒளிவருட தூரத்தில் உள்ள வாயு கோளொன்றில் நீர் இருப்பதற்கான அறிகுறிகளை நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி செயற்கைக்கோள் கண்டறிந்துள்ளது.

பால்வெளி மண்டலத்தில் கண்டறியப்பட்டுள்ள ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட தொலைதூரக் கோள்களில் வாஸ்ப்-96பி-யும் ஒன்று. சுமார் 1,150 ஒளிவருட தூரத்தில் சூரியனை போன்ற, நட்சத்திரத்தை சுற்றிவரும் அந்த வாயுக்கோளில் நீர் இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வளிமண்டலம், பனிமூட்டம், மேகங்கள் ஆகியவற்றை கொண்டிருப்பதை உறுதி செய்துள்ளது. பூமியை தவிர மனிதர்கள் வாழ்வதற்கு சாத்தியமுள்ள கோள்கள் குறித்த ஆய்வில் இது மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.