உலகம்

இலங்கையில் மோடிக்கு உற்சாக வரவேற்பு

இலங்கையில் மோடிக்கு உற்சாக வரவேற்பு

webteam

மாலத்தீவு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து இலங்கைக்குச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

நரேந்திர மோடி 2வது முறையாக பிரதமர் பதவியேற்ற பின், முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு சென்றார். தலைநகர் மாலேவில் மோடிக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின், மாலத்தீவு அதிபர் இப்ராகிம் சோலியை மோடி சந்தித்து பேசினார். இதன் பின் மாலத்தீவு நாடாளுமன்றத்தில் மோடி உரையாற்றினார். 

மாலத்தீவு பயணத்தை தொடர்ந்து இன்று இலங்கையில் சில நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கிறார். இதற்காக அவர் மாலத்தீவில் இருந்து இலங்கை சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வரவேற்றார். பின்னர் அவர் கொழும்பு செயின்ட் அந்தோணி தேவலாயத்தில்  நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இலங்கை அதிபர் சிறிசேனவை சந்தித்து பேசும் அவர், பின்னர் இந்தியா திரும்புகிறார். இன்று மாலை அவர் திருப்பதி செல்கிறார்.