டாக்காவுக்குச் சென்ற விமானத்தில் நிர்வாணமாக இருந்து கொண்டு ஆபாச சேட்டையில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பங்களாதேஷ் தலைநகர் டாக்காவுக்கு சனிக்கிழமை மலிண்டா விமானம் புறப்பட்டது. விமானத்தில் ஏராளமான பயணிகள் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது, ஓர் இளைஞர், கழிவறைக்கு சென்றார். அப்போது விமானப்பெண் ஒருவரை கட்டிப்பிடிக்க முயன்றார். அவர் தடுத்ததால் அடிக்க முயன்றார். இதுபற்றி சக விமானப்பணியாளர்களிடம் அந்தப்பெண் கூறிக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் தனது இருக்கைக்கு வந்த அந்த இளைஞர், அருகில் இருந்தவர்களைப் பற்றி கவலைப்படாமல் தனது உடைகளைக் களைந்தார். பிறகு லேப்டாப்பில் ஆபாச படத்தை ஓடவிட்டு சேட்டையில் ஈடுபட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அங்கிருந்த மற்ற பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் அவரிடம் சென்று சண்டையிட்டனர். ஒருவழியாக அவரது உடையை அணிய செய்தனர். பின்னர் ஒரு துணியால் அவர் கைகளை கட்டினர். பங்களாதேஷ் வந்ததும் அவரை போலீசில் ஒப்படைத்தனர்.
டாக்காவை சேர்ந்த அவர் ஏன் இப்படி நடந்துகொண்டார் என்று தெரியவில்லை. அந்த இளைஞர் மலேசிய பல்கலைக்கழகத்தில் படித்துவருகிறாராம்.
இதை சிலர் வீடியோ எடுத்துள்ளனர். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.