உலகம்

ஆழ்க்கடலில் கண்டெடுக்கப்பட்ட விசித்திரமான ஜந்து - குழப்பத்தில் நெட்டிசன்கள்!

Sinekadhara

ஹாரர் திரைப்படங்களில் வருவதைப்போன்று அகோரமான ஆழ்கடல் ஜந்து ஒன்று தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் தென்பட்டுள்ளது. இந்த உயிரினம் என்னவாக இருக்கும் என்று நெட்டிசன்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஜசோன் மோய்ஸ் என்ற மீனவர் பிடித்த அந்த உயிரினம் குறித்து அவர் கூறுகையில், நான் பார்த்ததிலேயே மிகவும் அவலட்சணமான கடல்வாழ் உயிரினம் இதுதான் என்கிறார். சமூக வலைதளங்களில் ட்ராப்மேன் பெர்மகுய் என்று அழைக்கப்படும் ஜெசோன், அவரது சொந்த ஊரான பெர்மகுய் கடற்கரையில் அந்த ஜந்துவை பிடித்ததாகக் கூறுகிறார்.

பிங்க் நிறத்துடனும், வீங்கிய கண்களுடனும், முகம் முழுக்க வாயாக இருப்பதுபோன்று பெரிய வாயுடனும், கூரிய பற்களுடனும் அகோரமாக காட்சியளிக்கிறது அந்த மீன். சுமார் 540 மீட்டர் ஆழத்தில் கண்டறியப்பட்ட இந்த மீன் சுமார் 4 கிலோ எடையுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் ஜெசோன்.

ப்ளாப்ஃபிஷ் மீன்கள் சைக்ரோலுடிடே குடும்பத்தைச் சேர்ந்தவை. இது ஒரு ஆழ்கடல் மீன். இது ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா மற்றும் நியூசிலாந்தின் கரையோரங்களில் உள்ள ஆழமான நீரில் வாழ்கிறது. இந்த மீன்கள் 30 செ.மீட்டருக்கும் குறைவான வளர்த்தியுடையவை. கடல் மட்டத்தை விட 60 முதல் 120 மடங்கு அழுத்தம் அதிகமாக இருக்கக்கூடிய 600 முதல் 1,200 ஆழமான நீரில் வாழக்கூடியவை.