உலகம்

மியான்மர் கலவரத்தின் போது 15000-க்கும் மேற்பட்டோர் இந்திய எல்லைக்குள் தஞ்சம் : ஐ.நா

EllusamyKarthik

மியான்மர் நாட்டில் இராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக 15000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்தியாவிற்கு இடம் பெயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ். 

“மியான்மர் நாட்டில் இருந்து இந்திய நாட்டு எல்லை பகுதியை சுமார் 15000-க்கும் மேற்பட்டவர்கள் கடந்திருக்கலாம். இது பிப்ரவரி 1-க்கு பிறகு அரங்கேறியவை. அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் என நான்கு மாநிலங்கள் மியான்மர் நாட்டு எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. கூடுதலாக 7000 பேர் தாய்லாந்தில் தஞ்சம் கொண்டிருந்தனர். பெரும்பாலானவர்கள் மியான்மர் திரும்பி இருந்தாலும் உள்நாட்டு அளவில் குடிபெயர்ந்து உள்ளனர்” என தெரிவித்துள்ளார் அவர். 

மியான்மரில் ராணுவ ஆட்சி அமைந்த நிலையில் இந்தப் போராட்டம் வெடித்தது.