உலகம்

ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு எதிராக கண்ணி வெடிகள் புதைக்கும் மியான்மர்

ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு எதிராக கண்ணி வெடிகள் புதைக்கும் மியான்மர்

Rasus

ரோஹிங்யா இஸ்லாமியர் திரும்பி வரமுடியாதபடி, வங்கதேச எல்லையில் மியான்மர் ராணுவம் கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்திருப்பதாக அல்ஜஸீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக வங்கதேச அரசு மியான்மரிடம் அதிகாரப்பூர்வமாக தனது எதிர்ப்பைத் தெரிவிக்க இருப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு வாரங்களுக்கு முன்பு ரோஹிங்யா இஸ்லாமியர் மீதான தாக்குதல் நடவடிக்கைகளை மியான்மர் ராணுவம் தொடங்கியது. இதில் 400 பேர் வரை கொல்லப்பட்டிருக்கின்றனர். சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் எல்லையைக் கடந்து வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்திருக்கின்றனர். தங்கள் நாட்டுக்குள் வருவோரை மீண்டும் மியான்மருக்கு திருப்பி அனுப்புவதற்கு வங்கதேசம் திட்டமிட்டிருக்கிறது. இதைத் தடுக்கும் வகையிலேயே, கண்ணிவெடிகளை மியான்மர் புதைத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ரோஹிங்யா இஸ்லாமியர் மீதான ராணுவ நடவடிக்கை தீவிரமடைந்திருக்கும் நிலையில், மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். இதில் வர்த்தகம், பாது‌காப்பு, அகதிகள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரியவந்திருக்கிறது. பல்வேறு உடன்பாடுகளும் கையெழுத்தாகின. பிரதமர் நரேந்திர மோடி மியான்மரில் மேற்கொள்ளும் முதலாவது அரசுமுறைப் பயணம் இதுவாகும்.