உலகம்

இஸ்லாமிய பெயர்களுக்கு சீனா எதிர்ப்பு

இஸ்லாமிய பெயர்களுக்கு சீனா எதிர்ப்பு

webteam

குழந்தைகளுக்கு இஸ்லாமிய பெயர்களை சூட்டக்கூடாது என சீனாவில் சின்ஜியாங் மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது.

மேற்கு சீனாவில் உள்ள சின்ஜியாங் மாகாண அரசு குழந்தைகளுக்கு இஸ்லாமிய பெயர்களை சூட்டக்கூடாது என்றும், 16 வயதிற்கு கீழ் உள்ளவர்களின் சிறுவர் மற்றும் சிறுமிகளின் பெயர்களில் உள்ள இஸ்லாமிய வார்த்தைகளை உடனே பிறப்பு சான்றிதழிலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமிய குடும்ப குழந்தைகளுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

முன்னதாக சின்ஜியாங் மாகாணத்தில் இஸ்லாம், குரான், மெக்கா, ஜிஹாட், இமாம், சாடாம், ஹாஜி, மெடினா, அராஃபெட் உள்ளிட்ட 15 வார்த்தைகள் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.