ஃபேஸ்புக்கில் கொலையை நேரலையாக ஒளிபரப்பியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுவருவதாக ஏற்கனவே பலர் புகார் கூறி வருகின்றனர். மார்பிங் செய்யப்பட்ட ஆபாசப் படங்களை வெளியிடுவது, பெண்களுக்கு பாலியல் ரீதியாக துன்பம் கொடுப்பது என்று சென்றுகொண்டிருந்த நிலையில் தற்கொலையை நேரலையாக ஒளிபரப்பி ஒருவர் அதிர்ச்சி கொடுத்தார். இந்நிலையில் அமெரிக்காவில் ஒருவர் கொலையை நேரலையாக ஒளிபரப்பி ஷாக் கொடுத்துள்ளார். அவன் பெயர் ஸ்டீவ் ஸ்டீபன்ஸ். அமெரிக்காவின் கிளீவ்லேண்ட் பகுதியைச் சேர்ந்த அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
அவர் மேலும் பல கொலைகளை செய்திருப்பதாகத் தெரிகிறது. ஸ்டீவை பிடிப்பதற்கு மத்திய மற்றும் பிற மாநில காவல்துறையினர் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் க்ளீவ்லேண்ட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.