அமெரிக்காவில் அடுத்தடுத்து அரங்கேறும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் நாளுக்கு நாள் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அண்மையில் டெக்சாஸ் அருகே உள்ள தொடக்க பள்ளியில் புகுந்த 18 வயது இளைஞர் ஒருவர் கண்ணில்பட்டவர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 19 மாணவ-மாணவிகள், 2 ஆசிரியர்கள் என 21 பேர் கொல்லப்பட்டனர். அடுத்ததாக அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காவல் அதிகாரி உட்பட 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் அமெரிக்காவில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு நிகழ்வு அரங்கேறியிருக்கின்றது.
விஸ்கான்சின் மாகாணத்தில் இறுதி ஊர்வலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மக்கள் பலர் படுகாயம் அடைந்தனர். கடந்த மே 20ல் போக்குவரத்து போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட 37 வயது நபரின் இறுதி ஊர்வலத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறி உள்ளது. கல்லறை தோட்டத்தில் புகுந்த மர்ம கும்பல் குழுமியிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. படுகாயம் அடைந்தவர்களின் முழு எண்ணிக்கை தெரியவராத நிலையில், 5-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்தடுத்து அரங்கேறும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் அமெரிக்க மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிக்கலாம்: முன்னாள் மனைவி மீது தொடர்ந்த அவதூறு வழக்கில் நடிகர் ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு