உலகம்

உக்ரைன் - பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நகரின் பல இடங்களில் குண்டுவெடிப்பு

உக்ரைன் - பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நகரின் பல இடங்களில் குண்டுவெடிப்பு

Veeramani

கிழக்கு உக்ரைனில் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் நகரின் வடக்கு பகுதியில் இன்று பல இடங்களில் குண்டுவெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த குண்டுவெடிப்பு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. மேலும் இது தொடர்பாக பிரிவினைவாத குழுக்களை சேர்ந்தவர்களிடமிருந்தோ அல்லது உக்ரைன் அரசிடமிருந்தோ உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

அதே நேரத்தில், கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் நடத்திய ஷெல் தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது