பாகிஸ்தானின் குவெட்டாவில் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 17 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.
குவெட்டா நகரின் பாதுகாப்பு முக்கியத்துவம் மிகுந்த இடத்தில் பேருந்து நிறுத்தம் ஒன்றில் குண்டு வெடித்ததாக பலூசிஸ்தான் மாகாண அமைச்சர் சர்பிராஸ் புக்தி தெரிவித்தார். இது தற்கொலைப்படை தாக்குதல் என்றும் ராணுவ வாகனம்தான் குண்டு வைத்தவர்களின் இலக்கு என்றும் அமைச்சர் தெரிவித்தார். பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில் அண்மைக்காலங்களாகவே பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.