model image Facebook
உலகம்

ஆபத்தான உயிரினம் | ஆண்டிற்கு 10 லட்சம் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் கொசு!

மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தான உயிரினங்கள் பட்டியலில், கொசு முதலிடத்தில் உள்ளது.

PT WEB

மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தான உயிரினங்கள் பட்டியலில், கொசு முதலிடத்தில் உள்ளது. தரவுகளின்படி, ஆண்டிற்கு 10 லட்சம் உயிரிழப்புகளை கொசுக்கள் ஏற்படுத்துகின்றன. அடுத்ததாக நன்னீர் நத்தைகள், ஆண்டிற்கு 2 லட்சம் உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றன.

கொசு

பாம்புகள் சராசரியாக 1 லட்சத்து 38 ஆயிரம் உயிரிழப்புகளையும், நாவாய் பூச்சிகள் 10 ஆயிரம் உயிரிழப்புகளையும், தேள்கள் 2 ஆயிரத்து 600 உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகின்றன. அஸ்காரிஸ் வட்டப்புழுக்கள், ஆண்டிற்கு 2 ஆயிரத்து 500 இறப்புகளையும், உப்புநீர் முதலைகள் 1000 உயிரிழப்புகளையும், யானைகள் 500 இறப்புகளையும், நீர் யானைகள் 500 உயிரிழப்புகளையும் ஏற்படுத்துவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.