உலகம்

இரண்டு லட்சத்தை தாண்டிய உயிரிழப்புகள்: லத்தீன் அமெரிக்காவில் கொரோனா தீவிரம்

webteam

உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் லத்தீன் அமெரிக்க நாடுகளை பாடாய்ப்படுத்தி வருகிறது. சனிக்கிழமையன்று இரவுடன் அங்கே நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரக்ளின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்த நிலையில், அரசு நிர்வாகங்கள் நிலைமையை சமாளிக்கமுடியாமல் தடுமாறிவருகின்றன.

அமெரிக்காவைத் தவிர்த்து, பிரேசில் மற்றும் மெக்சிகோவில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளைக் காட்டிலும் மிக அதிகமாக உள்ளது. அந்தப் பகுதிகளின் இறப்பு எண்ணிக்கையில் அது 70 சதவீதமாகும்.

பிரேசில் உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தைச் சீரமைக்கும் வகையில் மீண்டும் வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதாரக் கட்டுப்பாடுகளுடன் தொற்றைக் கட்டுக்குள் வைக்க மிகவும் போராடிவருகிறார்கள்.

இந்த வாரத்தின் ஆரம்பத்தில் பிரேசிலில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,595. சனிக்கிழமையன்று கூடுதலாக 1.088 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மெக்சிகோவில் 784 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் முதல்முறையாக 9 ஆயிரம் பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.