உலகம்

சீனா; நள்ளிரவில் நகர வீதியில் உலா வந்த நெருப்புக் கோழிகள்: வியந்து போன வழிபோக்கர்கள்!

சீனா; நள்ளிரவில் நகர வீதியில் உலா வந்த நெருப்புக் கோழிகள்: வியந்து போன வழிபோக்கர்கள்!

EllusamyKarthik

நகர வீதியில் இரவு நேரத்தில் 80-க்கும் மேற்பட்ட நெருப்புக் கோழிகள் உலா வருவது வழக்கமாக காணக் கிடைக்கும் காட்சிகள் அல்ல. ஆனால் இப்படியொரு அரிய காட்சி சீனாவின் குவாங்ஸீ மாகாணத்தின் சோங்ஸூ நகரில் நடந்துள்ளது. அந்த நகரில் அமைந்துள்ள பண்ணையில் இருந்து தப்பிய சுமார் 80+ நெருப்புக் கோழிகள் தெருவில் வலம் வந்த காட்சிகள் வெளியாகி உள்ளன.

அங்குள்ள தனியார் பண்ணையின் கதவுகள் சரிவர அடைக்கப்படாததால் அதில் இருந்து வெளியேறிய நெருப்புக் கோழிகள் கடந்த சனிக்கிழமை அன்று நகர்வலம் வந்துள்ளன. 

நகர காவல்துறையினர் உதவியுடன் கோழிகள் அனைத்தும் மீட்கப்பட்டு, பத்திரமாக மீண்டும் பண்ணையில் சேர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதை கவனித்த வழிபோக்கர்கள் வியப்படைந்து போயுள்ளனர். சிலர் அதை படம் பிடித்தும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.  

பூமியில் மிகவும் வேகமாக செல்லக்கூடிய பறவை இனம் நெருப்புக் கோழிகள்தான். மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகம் வரை இவை செல்லும் என தெரிகிறது. நிலத்தில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரிய முட்டையிடும் உயிரினம் இவை. மிகவும் பிரம்மாண்டமான பறவை இனம் இது.