தென் ஆப்ரிக்கா நாடாளுமன்ற கட்டத்தில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், 60க்கும் அதிகமான வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
கேப்டவுனில் உள்ள மூன்றடுக்கு நாடாளுமன்ற கட்டத்தின், மூன்றாவது தளத்தில் திடீரென ஏற்பட்ட தீ மளமளவென கட்டடம் முழுவதும் பரவியது. விடுமுறை காரணமாக, கட்டடத்தில் யாரும் இல்லாததால், எவருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்தில் மேல்தளம் முற்றிலும் சேதமடைந்து விட்டதாகவும், ஒரு பகுதி இடிந்து விழுந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற கட்டடத்தில் ஏராளமான மரச்சாமான்கள் இருப்பதால், தீயை கட்டுப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். 1884 ஆம் ஆண்டு கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டடம், 1980 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது.