உலகம்

எகிப்து: பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து; 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

எகிப்து: பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து; 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

JustinDurai

எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்ட விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 100 பேர் படுகாயமடைந்தனர்.

கெய்ரோவில் இருந்து நைல் டெல்டா பகுதிக்கு ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த ரயில் விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் சிக்கினர். 10க்கும் அதிகமானோர் சடலமாக மீட்கப்பட்டனர். படுகாயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள 3 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

எகிப்தில் கடந்த மாதம், இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். சுமார் 200 பேர் காயமடைந்திருந்தனர்.