உலகம்

சிரியா மீது ரஷ்யா குண்டுவீச்சு: 21 குழந்தைகள் உள்பட 53 பேர் உயிரிழப்பு

webteam

ஐ.எஸ். வசமுள்ள சிரிய பகுதி மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 21 குழந்தைகள் உள்பட 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் வசம் உள்ள டைர் எஸ்ஸோர் (Deir Ezzor) மாகாணத்தில் ரஷ்ய விமானப் படைகள் தாக்குதல் நடத்தியதில் 21 குழந்தைகள் உள்பட பொதுமக்கள் 53 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அம்மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மீது குண்டுகள் வீசப்பட்டதில், கட்டடங்கள் இடிந்து வி‌ழுந்து குப்பை மேடாக காட்சியளிக்கின்றன. ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடி வருவதாக கூறப்படுகிறது. இடிபாடுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.